உலகம்

19 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கடிதம்

19 கோடிக்கு ஏலம் போன ஐன்ஸ்டீன் கடிதம்

webteam

புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் இந்திய மதிப்பில் சுமார் 19 கோடியே 74 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது

நடந்து செல்லும் மனிதன், சாலையில் பயணிக்கும் கார், கடலில் செல்லும் கப்பல், வானத்தில் பறக்கும் விமானம், சூரியனைச் சுற்றும் கோள்கள், சுழன்று கொண்டிருக்கும் நட்சத்திரத் திரள்கள் என எல்லாவற்றின் இயக்கமும் சார்பானவை. தனித்தவை அல்ல. பார்வையாளர் அல்லது உணர்பவரின் இயக்கத்தைப் பொருத்து அவர் பார்க்கும் இயக்கமும் மாறுபட்டதாகத் தோன்றும் என்பதைத்தான் சார்பு நிலை என்கிறார்கள். இந்தச் சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர். கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதை. உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர் ஆவார்.

அவ்வப்போது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பயன்படுத்திய பொருட்கள், அவரின் குறிப்புகள் சிலவும் ஏலமிடப்படுகின்றன. இந்நிலையில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கையெழுத்திட்ட கடிதங்களில் இருந்து ஒரு தொகுப்பு நியூயார்க்கில் ஏலமிடப்பட்டது. 1954 ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் எழுதபட்ட அந்தக் கடிதத்தில் யூத மதம் பற்றிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. ஐன்ஸ்டீனின் இந்தக் கடிதத்தை அந்த ஆசிரியர் குடும்பத்தினர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்திருக்கின்றனர். தற்போது கிறிஸ்டி ஏல நிறுவனம் அவரது கடிதத்தை ஏலமிட்டது. 'GOD LETTER' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த இந்தக் கடிதம் சுமார் 19 கோடியே 74 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய குறிப்புகள் அடங்கிய இரு துண்டு சீட்டுகள் சுமார் 10 கோடி ரூபாய்க்கு கடந்த வருடம் ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது