உலகம்

லெபனான் வெடிவிபத்து தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு - பிரெஞ்சு குடியரசுத் தலைவர்

லெபனான் வெடிவிபத்து தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அழைப்பு - பிரெஞ்சு குடியரசுத் தலைவர்

webteam

லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விபத்து நடந்த பகுதிக்குச் சென்று பார்வையிட்ட பிரெஞ்சு குடியரசுத் தலைவர் எம்மானுவேல் மேக்ரோன், "ஊழலை  ஆட்சியாளர்கள் இனி முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. நான்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குப் பிறகு இதுதொடர்பாக பெய்ரூட் துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வெடித்து விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

பெய்ரூட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், வெடிவிபத்து தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அழைப்புவிடுத்திருப்பதாகத் தெரிவித்தார். மேலும், மக்களால் விரும்பப்படும் ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களைச் செய்ய இதுவே சரியான தருணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.