உலகம்

உணவில் மனிதப் பல்: மீண்டது மெக்டொனால்டு

உணவில் மனிதப் பல்: மீண்டது மெக்டொனால்டு

rajakannan

மெக்டொனால்டு நிறுவனத்தின் உணவில் மனிதப் பல் இருந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, கடும் சரிவை சந்தித்த நிறுவனம், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டு வந்துள்ளது.

உலகின் முன்னணி உணவு வணிக நிறுவனமாக மெக்டொனால்டு திகழ்ந்து வருகிறது. ஜப்பான் நாட்டில் இயங்கி வந்த மெக்டொனால்டு நிறுவனத்தின் கிளை ஒன்றில் கடந்த 2011 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உணவில் மனிதப் பல் கிடந்தது. உணவை சாப்பிட்ட குழந்தைக்கு பல்லை கடித்ததால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மெக்டொனால்டு வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டது. இதனால் பெரும் சர்ச்சை கிளம்பியது.

இதனால், மெக்டொனால்டு நிறுவனத்தின் பெயருக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. மெக்டொனால்டு நிறுவனமே ஜப்பானில் பெரும் சரிவை சந்தித்தது. இதனையடுத்து பெரும் முயற்சிக்கு பிறகு மெக்டொனால்டு நிறுவனம் சரிவில் இருந்து மீண்டுள்ளது. 

ஜப்பான் நாட்டில் வெளிநாட்டு ரெஸ்டாரண்ட் கொண்டு வருவதற்கு உதவிய கலிபோர்னியாவை மையமாக கொண்டு செயல்படும் ஆலோசகர் ஒருவர் கூறுகையில், “அந்த நாட்களை நான் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். மெக்டொனால்டு முடிந்தேவிட்டது. பெயரை கூட மாற்ற வேண்டும் என்று நிறைய பேர் கூறினார்கள். ஏனெனில் நிறுவனத்தின் பெயர் மோசமாகிவிட்டது” என்றார்.