உலகம்

வளர்ப்பு பூனைகளுக்கு உணவளிப்பதற்காக தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்மணி!

வளர்ப்பு பூனைகளுக்கு உணவளிப்பதற்காக தினம் ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்மணி!

webteam

இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், வாரத்தில் ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டாலும், தாம் வளர்க்கும் பூனைகளைப் பட்டினி கிடக்க விடாமால் வளர்த்து வருகிறார்.

வடக்கு லண்டனைச் சேர்ந்தவர் யாஸ்மென் கப்டன். 46 வயதான இந்தப் பெண்மணி, தன்னுடைய ஆறு பூனைகள் உணவு சாப்பிடுவதற்காக, ஒருவருடமாக இருவேளை உணவைத் தவிர்த்து வருவதாக, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு வரை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த கப்டன், அந்த ஆண்டுக்குப் பிறகு வேலையிலிருந்து விலகியுள்ளார். ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) என்ற நோய் பாதிப்பிற்குப் பிறகு அந்த வேலையிலிருந்து விலகியுள்ளார்.

ஆஸ்டியோபோரோசிஸ் என்பது எலும்பு மெலிதல் நோய் ஆகும். எலும்பின் உறுதித்தன்மை குறைவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதனால் எளிதில் எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. இந்த நோயின் காரணமாக கப்டன், மாதந்தோறும் அரசு வழங்கும் £400 உதவித் தொகை பெறுகிறார். ஆனால், இந்தத் தொகை அவருடைய செலவுக்குப் போதுமானதாக இல்லை. விலைவாசி உயர்வால் இந்த தொகையைக் கொண்டு ஒரு மாதத்தைப் பூர்த்தி செய்ய முடியாத சூழல் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையிலும் அந்த பணத்தைவைத்து 6 பூனைகளை நன்றாக வளர்த்துவருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “நான் 6 பூனைகளை வளர்த்து வருகிறேன். அவைகளை கடந்த 17 ஆண்டுகளாக வளர்த்து வருகிறேன். அவைகள் என்னுடைய சிறு குழந்தைகள். அவைகள் என்னிடம் பிரியமாய் இருக்கின்றன. அவற்றை வாங்குவதற்கு நான் நிறைய செலவழித்தேன்(அதாவது, அவர் நல்ல வேலையில் இருந்தபோது இந்த பூனைகளை வாங்கியுள்ளார்). அவைகளை, நான் விடுவதாக இல்லை. தற்போது நான் பெறும் £400, வாடகை மற்றும் இதர செலவுகளுக்குச் செலவழிக்கப்படுகிறது. இதில் £60 பூனைகளின் உணவான பால், பிஸ்கெட்டுக்கும் செலவிடப்படுகிறது. முக்கியமாக, இந்த தொகையில் நான் தொலைபேசி கட்டணம் மட்டும் செலுத்திக் கொள்கிறேன்.

எனது உணவுக்கு என்று செலவு செய்துகொள்வதில்லை. எனது பசியை மறக்கும் விதமாக காலை, மதியம், இரவு ஆகிய வேளைகளில் புதினா கலந்த தேநீர் அருந்துகிறேன். அதேநேரத்தில் வாரத்தில் ஒருவேளை மட்டும் உணவு உண்கிறேன். அப்படியே சாப்பிட்டாலும் காய்கறிகள் நிறைந்த சாலட்டைத்தான் சாப்பிடுகிறேன். என் உணவை, நான் நிறுத்தியதிலிருந்து தற்போது 31 கிலோவுக்கு மேல் குறைந்துள்ளேன். 88 கிலோ இருந்த நான், தற்போது 57வாக உள்ளேன். ஆனால், இவை எல்லாம் எனக்குப் பழகிவிட்டது. இவற்றால் நான் தினம் அழுதாலும், மகிழ்ச்சியாகவே இருக்கவே முயலுகிறேன். ஆனாலும், குழந்தைகள் போல் இருக்கும் என் பூனைகள்விட பிரிய மனமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்