குழந்தை கோப்புப்படம்
உலகம்

சீனா - அரியவகை நோய் காரணமாக 10 செ.மீ நீள வாலுடன் பிறந்த குழந்தை...!

குழந்தைகள் சேட்டை செய்தால், ‘சரியான வாலு, வாணரம், அறுந்த வாலு’ என்று பெற்றோர் திட்டுவதுண்டு. ஆனால் உண்மையில் ஒரு குழந்தை வாலுடன் பிறந்திருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

Jayashree A

சீனாவில் கடந்தவாரம் ஒரு பெண்ணிற்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. பிறந்த அக்குழந்தையை கண்ட மருத்துவர்களும் செவிலியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம் அக்குழந்தைக்கு 10 செ.மீ (4 இன்ச்) அளவிற்கு வால் இருந்துள்ளது.

மருத்துவர்கள் இந்த வாலை tethered spinal cord என்று கூறுகின்றனர். அதாவது தண்டுவடத்தில் குறைபாடுடன் கூடிய நரம்பியல் கோளாறு. இதனால்தான் இந்த வால் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வால் நரம்பு மண்டலத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும், அதனை நீக்கினால் குழந்தைக்கு ஆபத்து என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மிக அரியவகை நோயாக இது அறியப்படுகிறது.

ஆகையால் குழந்தை வாலுடனே வளர இருக்கிறது. குழந்தை வளர வளர வாலும் வளருமா என்ற அச்சம் பெற்றோருக்கு எழுந்துள்ளது. இந்த ‘வால்’ குழந்தை வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.