அயர்லாந்தைச் சேர்ந்த ரேலி கார் பந்தய வீராங்கனையான ரோஸ்மேரி ஸ்மித், 79 வயதில் பார்முலா ஒன் பந்தயங்களில் பங்கேற்கும் காரை ஓட்டி சாதித்தார்.
1960களில் பிஸியான ரேலி கார் ஓட்டுனராகவும், வழிகாட்டியாகவும் இருந்த ரோஸ்மேரி ஸ்மித், வயதானதற்குப் பிறக கார் பந்தயங்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். ரெனால்ட் ஸ்போர்ட் நிறுவனத்தின் 40ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு 79 வயதான ரோஸ்மேரியை பார்முலா ஒன் பந்தயங்களில் பங்கேற்கும் காரை ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
2013ம் ஆண்டு மாடலான லோட்டஸ் – ரெனால்ட் இ21 மாடல் ரேஸ் காரை முழு வேகத்தில் இயக்கி ரோஸ்மேரி சாதனை படைத்தார். இதன்மூலம் பார்முலா ஒன் ரேஸ் காரை ஓட்டிய மூத்த வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். ரேஸ் கார் ஓட்டிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ரோஸ்மேரி, இதுபோன்ற வாய்ப்பு எனது வாழ்வில் கிட்டும் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. காரை வேகமாக, மிக வேகமாக ஓட்ட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நனவாகியுள்ளது என்று சிலிர்க்கிறார்.