அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 75 கோடி மரபணுமாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை பறக்கவிட முடிவு செய்துள்ளனர்.
உலக அளவில் புதுப்புது நோய்கள் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. இந்த நோய்களுக்கு வைரஸ்களும், கொசுக்களுமே முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இந்நிலையில் கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, ஜிகா உள்ளிட்ட நோய்களை தடுக்கப்போவதாக விபரீத முயற்சியில் அமெரிக்க அரசு இறங்கியுள்ளது.
அமெரிக்காரின் ஃப்ளோரிடாவில் இந்த ஆண்டு மட்டும் பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அங்கிருந்து அமெரிக்க தனது விபரீத முயற்சியை தொடங்கவுள்ளது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் மூலம் மரபணுமாற்றம் செய்யப்பட்ட 75 கோடி கொசுக்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஃப்ளோரிடாவில் வெளியடப்படவுள்ளன.
இந்த கொசுக்கள் டெங்கு உள்ளிட்ட நோய்களை பரப்பும் கொசுக்களின் இனப்பெருக்கத்தை தடுத்து, அவற்றை முழுமையாக ஒழிக்கும் என அமெரிக்க அரசு நம்புகிறது. அத்துடன் இந்த விபரீத திட்டத்திற்கு அனுமதியும் அளித்துள்ளது. ஆனால் ஃப்ளோரிடா மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.