உலகம்

நைஜீரியாவில் பணத்திற்காக 73 பள்ளி மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

நைஜீரியாவில் பணத்திற்காக 73 பள்ளி மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்

kaleelrahman

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி ஒன்றிலிருந்து 73 மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் காயா என்ற ஊரில் இக்கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடத்தல்காரர்கள் பிடியிலிருந்து மாணவர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருவதாக நைஜீரிய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் வடக்கு பகுதியில் பள்ளி மாணவர்கள் கடத்தப்படுவது வழக்கமான ஒன்று என்றும் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக்கொண்டு மாணவர்களை கடத்தல்காரர்கள் விடுவித்து விடுவர் என்றும் கூறப்படுகிறது.

எனினும் பணம் கிடைக்காவிட்டால் பள்ளி மாணவர்களை கொல்லும் நிகழ்வுகளும் நைஜீரியாவில் அதிகம் நடந்துள்ளன. கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆயிரம் மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் கடத்தலை தடுக்க முடியாததால் பல பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன.