உலகம்

”யார் யாரை எங்கே நேசிக்க..” : வாக்கிங்.. பாடல்.. இளம்பெண்ணை காதலித்து கரம்பிடித்த முதியவர்

”யார் யாரை எங்கே நேசிக்க..” : வாக்கிங்.. பாடல்.. இளம்பெண்ணை காதலித்து கரம்பிடித்த முதியவர்

JananiGovindhan

காதலிக்க ஏது வயது தடை என்ற வசனங்களெல்லாம் திரைப்படங்களில் கேட்ட காலம் போய்விட்டது என்பதை பல உண்மையான காதல் கதைகள் மெய்ப்பித்து வருகின்றன. அந்த வகையில் 70 வயது முதியவர் 19 வயது இளம்பெண்ணை காதலித்து கரம் பிடித்திருக்கும் நிகழ்வு பாகிஸ்தானில் நடந்திருக்கிறது.

பாகிஸ்தானின் பிரபல யூடியூபரான சையத் பசித் அலி, ஏராளமான காதல் கதைகள் குறித்து பேட்டி எடுத்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்றுதான் மேற்குறிப்பிட்ட ஜோடியின் காதல் கதை. அதன்படி காலை வாக்கிங் செல்லும் போது மலர்ந்த காதலாகவே இருந்திருக்கிறது.

லாகூரைச் சேர்ந்த 70 வயதான லியாகத் அலி , அதேப் பகுதியை சேர்ந்த 19 வயதான ஷுமைலா மீது காதல் கொண்டிருக்கிறார். இது குறித்து சையத்தின் பேட்டியின் போது பேசியுள்ள லியாகத் அலி, “ஷுமைலாவை லாகூரில் காலை நடைபயிற்சி செய்யும்போதுதான் சந்தித்தேன். ஒரு நாள் பாடல் ஒன்றை முனுமுனுத்துக்கொண்டே அவர் பின்னால் சென்றேன். அதன் பிறகே எங்களுடைய காதல் வாழ்க்கை தொடங்கியது” எனக் கூறியுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய ஷுமைலா, “நாங்கள் எங்களுடைய வயது வரம்பையெல்லாம் பார்க்கவில்லை. அது அப்படியே நடந்துவிட்டது. எங்கள் காதலுக்கு எனது பெற்றோர் முதலில் மறுத்தார்கள். ஆனால் நான் சமாதானம் செய்த பிறகு ஒப்புக்கொண்டார்கள். மிகப்பெரிய வயது வித்தியாசத்தில் காதலித்து திருமணம் செய்துக் கொள்வோரின் முடிவை மக்கள் ஏற்க வேண்டும். ஏனெனில் அது அவர்களுடைய வாழ்க்கை.” என தெரிவித்திருக்கிறார்.

மேலும், “தவறான உறவில் போய் சிக்கிக் கொள்வதற்கு பதில், நல்ல மனிதரை திருமணம் செய்துக் கொள்ளலாம். அதற்கு கவுரவம், வயது வித்தியாசம், தனிப்பட்ட கண்ணியம் என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. சட்டப்படி திருமணம் செய்துக்கொள்ள தகுதியுடையவர்கள் வயதானவரோ, இளையவரோ எவரை வேண்டுமானாலும் மணமுடித்துக்கொள்ளலாம்” என்றும் ஷுமைலா கூறியிருக்கிறார்.

அதேபோல, “ரொமான்ஸ் என வரும் போது வயது வரம்பெல்லாம் கிடையாது. என் வயது 70 ஆக இருந்தாலும் மனதளவில் நான் இளைமையாகத்தான் இருக்கிறேன். என் மனைவி சமைக்கும் உணவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்று லியாகத் அலி தெரிவித்திருக்கிறார்.