உலகம்

இங்கிலாந்து: 3 வது கட்ட ஆய்வுக்காக 6,000 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

இங்கிலாந்து: 3 வது கட்ட ஆய்வுக்காக 6,000 தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பூசி

Veeramani

இங்கிலாந்தில் அடுத்தக்கட்டமாக  6000  தன்னார்வலர்கள் எபொலா ஜாப் கொரோனா தடுப்பூசியை உட்படுத்திக்கொள்ள உள்ளனர்

இங்கிலாந்தில் பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளில் நுழைந்த மூன்றாவது கோவிட்-19 தடுப்பூசி இதுவாகும். இங்கிலாந்தில் தடுப்பூசி விநியோகத்திற்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், மிகவும் பயனுள்ள தடுப்பூசியை அடையாளம் காண்பதற்கும் பல தடுப்பூசிகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஆக்ஸ்போர்டு கோவிட் தடுப்பூசி மற்றும்  அமெரிக்க பயோடெக் நிறுவனமான நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள தடுப்பூசி ஆகியவை  பிரிட்டிஷ் நோயாளிகளிடம்  பெரிய அளவிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது. தற்போது உலகளாவிய மருந்து நிறுவனமான ஜான்சன் (ஜான்சன் & ஜான்சனின் துணை நிறுவனம்) உருவாக்கிய இந்த தடுப்பூசியின் 3ஆம் கட்ட சோதனை இன்று தொடங்குகிறது.