உலகம்

5 நாடுகளின் பிரதமர்களை சந்தித்தார் மோடி

5 நாடுகளின் பிரதமர்களை சந்தித்தார் மோடி

rajakannan

பிலிப்பைன்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான், சீனா உள்ளிட்ட 5 நாடுகளின் பிரதமர்களை சந்தித்து பேசினார்.

ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். இந்திரா காந்திக்கு பிறகு மணிலா செல்லும் இரண்டாவது இந்திய பிரதமர், மோடி ஆவார்.

ஆசியான் மாநாட்டிற்கு இடையில், ஆஸ்திரேலியா, வியட்நாம், ஜப்பான், நியூசிலாந்து, சீனா ஆகிய நாடுகளின் பிரதமர்களை பிரதமர் மோடி இன்று சந்தித்தார். ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ ஆபே உடனான சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

உலக அரங்கில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் இணைந்து செயல்படுத்துவது குறித்து இரு நாட்களுக்கு முன் 4 நாட்டு அதிகாரிகளும் பேசியிருந்தனர். முன்னதாக இக்கூட்டத்திற்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பையும் நேற்று மோடி சந்தித்து பேசியிருந்தார்.