மலேசியாவில் உள்ள சீ பீல்ட் மாரியம்மன் கோயில் இடமாற்றம் செய்வதை கண்டித்து நடந்த வன்முறையில் 18 வாகனங்கள் தீக்கு
இறையாகின.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள சீ பீல்ட் மாரியம்மன் கோயில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு
அந்நாட்டு நீதிமன்றம் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோயில் இடமாற்றம்
செய்யும் முயற்சியில் மலாய் மக்கள் இறங்கியுள்ளனர். இதற்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறி அங்கு பதட்டமான
சூழல் ஏற்பட்டுள்ளது. வன்முறையில் அந்தப் பகுதியில் இருந்த 18 வாகனங்கள் மீது கல்வீசி தாக்கப்பட்டு, தீவைத்து எரிக்கப்பட்டன.
இதனால் அப்பகுதியில் வன்முறையை கட்டுப்பட்டுத்த ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முகமூடி அணிந்து கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது
செய்யப்பட்டவர்கள் அனைவரும் தமிழர்கள் எனக்கூறப்படுகிறது. நீண்ட வருடங்களாக மலேசியாவில் தமிழர்கள் மற்றும் மலாய்
மக்களிடையே மோதல் நீடித்து வரும் நிலையில், மலாய் மக்களைக் கொண்டு மாரியம்மன் கோயிலை அகற்ற முயன்றதே
கலவரத்திற்கு முக்கியக் காரணம் என்றும் கூறப்படுகிறது.