உலகம்

2017-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2017-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Rasus

2017-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ரெய்னர் வைஸ், பேரி சி.பேரிஸ், கிப்.எஸ்.தோர்ன்  ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு இந்தாண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் கோரன் ஹான்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு விசை அலைகள் கண்டுபிடிப்பை உறுதி செய்ததற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு ஈர்ப்பு விசை அலைகள் கண்டுபிடிப்பை லிகோ என்ற கருவி மூலம் இந்த 3 விஞ்ஞானிகளும் உறுதி செய்துள்ளனர். இதில் ரெய்னர் வைஸ் ஜெர்மனியை சேர்ந்தவர். பேரி சி.பேரிஸ் கிப்.எஸ்.தோர்ன் ஆகியோர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர்.