உலகம்

15 செ.மீ உயர்ந்த தென் சீனக்கடல்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

15 செ.மீ உயர்ந்த தென் சீனக்கடல்! ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

webteam

1900 ஆம் ஆண்டு முதல் தென் சீனக்கடல் 15 செ.மீ.வரை உயர்ந்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தென்சீனக்கடலில் சீன அறிவியல் அகாடமி (CAS) மற்றும் நாட்டின் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்களால் ஒரு பிரமாண்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு தென் சீனக் கடலில் அதிக வளர்ச்சி விகிதம், தெளிவான வருடாந்திர வளர்ச்சி அடுக்கு மற்றும் பரந்த பரவலான பவளப்பாறையை மையமாகக் கொண்டது. கடல் நீர் சூழலின் மாற்றத்தை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் பொரிட்ஸ் பவளம், கடல் மட்டத்தின் ஆக்ஸிஜன் அளவு, நிலையான ஐசோடோப்புகள், கடல் மேற்பரப்பு உப்புத்தன்மை, கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் தென் சீனக் கடலின் மழைப்பொழிவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் தென் சீனக் கடலின் கடல் மட்டம், 1900ம் ஆண்டு முதல், 150 மி.மீ., உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடல் மட்டம் 1850 முதல் 1900 வரை ஆண்டுக்கு 0.73 மிமீ குறைந்து வந்துள்ளது. பின்னர் 1900 முதல் 2015 வரை ஆண்டுக்கு 1.31 மிமீ உயர்ந்துள்ளது என்று ஆய்வு காட்டுகிறது. 1993 முதல் தென் சீனக் கடலில் கடல் மட்ட உயர்வு துரிதப்படுத்தப்பட்டு, ஆண்டுக்கு 3.75 மிமீ உயர்ந்துள்ளது. தென் சீனக் கடலில் கடல் மட்ட மாற்றங்கள் 1850 முதல் 1950 வரை சூரிய செயல்பாடு மற்றும் பசுமை இல்ல வாயுக்களின் கலவையின் விளைவாக இருக்கலாம் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது, மேலும் 1950 முதல் கடல் மட்டத்தின் விரைவான உயர்வுக்கு பசுமை இல்ல வாயுக்கள் முக்கிய காரணியாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு பேலியோஜியோகிராபி, பேலியோக்ளிமேட்டாலஜி, பேலியோகாலஜி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. தென் சீனக்கடல் சீனாவிற்கு மட்டுமல்ல! அந்த கடலில் கரையில் உள்ள மற்ற நாடுகளுக்கும் முக்கியமானது! உலகின் மற்ற நாடுகளுக்கும் 4 டிரில்லியன் டாலர் இந்தக் கடல் வழியேதான் நடக்கிறது. சுருங்கச் சொன்னால் உலக கடல் வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கு அதன் வழியாக செல்கிறது.