உலகம்

காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு - 13 பேர் பலி

காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு - 13 பேர் பலி

Sinekadhara

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடித்ததால் 13 பேர் உயிரிழந்தனர்.

வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள், தலிபான்கள் மற்றும் பொதுமக்களில் பலர் காயம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆப்கானில் தலிபான் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் என பலரும் நாட்டைவிட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர், இம்மாத இறுதிவரை அமெரிக்கப் படைகள் நாட்டைவிட்டு வெளியேற தலிபான்கள் அவகாசம் கொடுத்துள்ள நிலையில், அதுவரை விமான நிலைய கட்டுப்பாடுகளில் தலையிடுவதில்லை என்றும் அறிவித்திருக்கின்றனர். மற்ற நாடுகள் அவகாசத்தை நீட்டிக்க கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆப்கான் முழுவதும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ள இந்நிலையில் காபூல் விமான நிலையத்தின் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.