உக்ரைனில் 11ஆவது நாளாக போர் நீடிக்கும் நிலையில், 15 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 24ஆம் தேதி ரஷ்யா உக்ரைனில் தாக்குதலை தொடங்கியது.
நேற்று தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் அது பெருமளவில் பலனளிக்கவில்லை. இந்த சூழலில் 15 லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. போலந்து, ருமேனியா, சுலோவாகியா ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
முன்னதாக , இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட் , ரஷ்யா அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியையும் தொடர்பு கொண்டு அவர் பேசியுள்ளார். எனவே நாளைய தினம் , ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.