உலகம்

`எப்படியாவது உடனே வெளியேறுங்கள்’-உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

`எப்படியாவது உடனே வெளியேறுங்கள்’-உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

நிவேதா ஜெகராஜா

உக்ரைன் தலைநகர் கீவ்-விலிருந்து இன்றே வெளியேறுமாறு இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், `ரயில்கள், பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கீவ் நகரிலிருந்து எப்படியாவது இன்றே வெளியேறவும்’ என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று பெலாரஸில் நடந்த ரஷ்யா - உக்ரைன் இருநாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக் கூறப்படுவதால், வரும் நாள்களில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதனால் இன்றே கீவ் நகரிலிருந்து இந்தியர்கள் வெளியேறுமாறு தூதரகம் சார்பில் கூறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து எல்லைகள் வழியாக இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.