வீடியோ ஸ்டோரி

ஐடி நிறுவனங்களில் தொடரும் வேலை நீக்கங்கள்: இந்திய நிறுவனங்களிலும் தொடர்கிறதா?

ஐடி நிறுவனங்களில் தொடரும் வேலை நீக்கங்கள்: இந்திய நிறுவனங்களிலும் தொடர்கிறதா?

webteam

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியவுடன் முதலில் செய்தது அந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரிகள் தொடங்கி, தொழில்நுட்ப வல்லுநர்கள் என பல்வேறு தரப்பினரையும் பணியிலிருந்து நீக்கியது. அதைத்தொடர்ந்து facebook, whatsapp, instagram உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இப்படி முக்கிய நிறுவனங்களில் 2022-ம் ஆண்டில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதற்கிடையில் கூகுள் நிறுவனம், தனது தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தில் ஆட்குறைப்பில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளது. யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை என்றும், பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு, 2023 ஆம் ஆண்டில் செயல் திரை கண்காணிக்க உள்ளதாகவும், 2023-ம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொடர் பணி நீக்க நடவடிக்கைகள் ஐடி ஊழியர்கள் மட்டுமல்லாமல் இதர பணிகளில் உள்ளவர்களையும் கலக்க மடையச் செய்துள்ளது.

புதிய தலைமுறையின் நேர்படப்பேசு நிகழ்ச்சியில்,'ஐடி நிறுவனங்களில் தொடரும் வேலை நீக்கங்கள் மற்ற நிறுவனங்களுக்கும் பரவுமா? எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்' என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.  

இந்நிகழ்ச்சியில் பேசிய ஐடி துறை வல்லுநர் ஷான் கருப்பசாமி, இந்தியாவில் உள்ள பல ஐடி நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால் அங்கு நடக்கும் பொருளாதார வீழ்ச்சி இங்குள்ள நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது. கொரோனா காலத்தில் ஐடி நிறுவனங்கள் சந்தித்த வளர்ச்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை'' என்று கூறினார். ஷான் கருப்பசாமி பேசிய முழு வீடியோவை இணைப்பில் காணலாம்..



பொருளாதார ஆலோசகர் கே.சுரேஷ் பேசுகையில், ஐடி நிறுவனங்களைப் பொறுத்தவரையில் 60 சதவிகித வருமானம் அந்நிறுவன ஊழியர்களின் சம்பளத்திற்கே செலவிடப்படுகிறது. பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் நிறுவனம் இழப்பை எதிர்கொள்ளும்போது உடனடி நிவாரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்கின்றன'' என்று கூறினார்.  கே.சுரேஷ் பேசிய முழு வீடியோவை இணைப்பில் காணலாம்..