உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. 224 உறுப்பினா்களைக் கொண்ட கா்நாடக மாநில சட்டப் பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
அம்மாநிலத்தில் மொத்தம் 5,31,33,054 வாக்காளா்கள் உள்ளனா். 11,71,558 புதிய வாக்காளா்கள் முதல்முறையாக வாக்களிக்கின்றனா். மாநிலம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்தலை அமைதியாக நடத்துவதற்காக, 1.60 லட்சம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கா்நாடக சட்டப் பேரவை தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் களத்தில் உள்ளன. 224 சட்டப்பேரவை தொகுதிகளில் 2,615 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.
காலை 9 மணி வரையிலான நிலவரப்படி 9% வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்களிக்க பலர் வரிசையில் காத்திருக்கின்றனர். பொதுவாக காலையில்தான் அதிக வாக்குப்பதிவு நடக்குமென கூறப்படும் நிலையில், காலை 9 மணி வரை பதிவான வாக்குகள் மிகக்குறைவாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவே காலை 11 மணி வரையிலான 20.99% வாக்கு பதிவாகியுள்ளது.