வீடியோ ஸ்டோரி

அழியும் ஈட்டி மரங்கள்; பாதுகாக்க முயற்சிக்கும் அறிவியலாளர்கள்

அழியும் ஈட்டி மரங்கள்; பாதுகாக்க முயற்சிக்கும் அறிவியலாளர்கள்

Sinekadhara

இரும்புக்கு இணையாக போற்றப்படுபவை ஈட்டி மரங்கள். இயற்கையின் அற்புதமான இந்த மரங்கள் அழியும் தருவாயில் உள்ளதால், அதனை பாதுகாக்கும் முயற்சியில் அறிவியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இரும்புக்கு இணையாக போற்றப்படும் ஈட்டி மரங்கள் அழிந்து வரும் மரங்களின் பட்டியலில் உள்ளன. இதன் தேவையும், விலையும் அதிகம் என்பதால் இவை வெட்டப்படுகின்றன. எனவே எண்ணிலடங்கா பலனைத் தரும் ஈட்டி மரங்களை பாதுகாக்க வேளாண் அறிவியலாளர்களின் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் திசு வளர்ப்பு முறையில் ஈட்டி மரக்கன்றுகளை உருவாக்குகின்றனர். இதேபோல் விவசாய நிலங்களிலும் வளர்க்க அறிவியலாளர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.