வீடியோ ஸ்டோரி

'ஒன்றிணைந்து நின்றால் உரிமைகளை வென்றெடுக்கலாம்' - பஞ்சாப்பில் சீமான் பேச்சு

'ஒன்றிணைந்து நின்றால் உரிமைகளை வென்றெடுக்கலாம்' - பஞ்சாப்பில் சீமான் பேச்சு

கலிலுல்லா

தேசிய இனங்கள் ஒன்றிணைந்து நின்றால் உறுதியாக உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்ற மக்கள் உரிமை ஒன்றுகூடல் நிகழ்ச்சியில், மனித உரிமைகளுக்கான நாகா மக்கள் இயக்கம், திரிபுரா மக்கள் முன்னணி, தல் கல்சா, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன. இதில் பேசிய சீமான், நாடாளுமன்றத்தில் எந்த விவாதங்களும் நடத்தாமல் சட்டங்களை மத்திய அரசு இயற்றிக் கொண்டே செல்வதாக விமர்சித்தார்.

முன்னதாக, சீக்கியர்களின் புனித அடையாளமான பொற்கோயில் படம் பொறித்த நினைவுப்பரிசு சீமானுக்கு வழங்கப்பட்டது.