வீடியோ ஸ்டோரி

கடலூர்: உயிரிழந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்யும் அவலம்

கடலூர்: உயிரிழந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்யும் அவலம்

Sinekadhara

சுடுகாட்டுக்கு வழி இல்லாததால் ஆற்றில் கழுத்தளவு நீரில் உடலை சுமந்துசென்று இறுதிச்சடங்கு செய்யும் அவலநிலை கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாத காரணத்தினால் உயிர் இழந்தவர்களின் உடலை ஆற்றில்தான் கொண்டுசென்று இறுதிச்சடங்கு செய்யும் பழக்கம் கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் இன்றும் உள்ளது. தமிழகத்தில் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டம் வழியாக வங்கக்கடலுக்கு செல்லும் அனைத்து ஆறுகளிலும் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

இந்நிலையில் ஸ்ரீமுஷ்ணம் அருகே கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரன் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை வெள்ளாற்றில் கழுத்தளவு தண்ணீரில் அவரது உறவினர்கள் சுமந்து சென்று மறு கரையில் வைத்து இறுதிச்சடங்கு செய்தனர். ஆற்றில் வெள்ளம் ஓடுவதால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் கூறிவந்தாலும், உயிரிழந்தவரின் உடலை மரியாதையாக அடக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உயிரை பணயம் வைத்து ஆற்றில் இறங்கிச் சென்றுள்ளனர். இந்த காட்சிகளை அக்கிராம மக்கள் ’எங்கள் கிராமத்தின் நிலை இதுதான்’ என தற்போது சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகிறார்கள்.