காதல் உறவு குறித்து அவ்வப்போது காதலில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். பொதுவாக காதல் உறவில் நிகழும் பிரச்னைகள் குறித்த பதிவுகள் அதிகம் காணக் கிடைக்கும்.
அந்த வகையில், Mumsnet என்ற தளத்தில் பெண் ஒருவர் தனது காதலனின் முகம் சுழிக்க வைக்கும் பழக்கம் குறித்து பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவை கண்ட நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அப்படி என்ன பழக்கத்தை அந்த நபர் கொண்டிருக்கிறார்? என்பதை அப்பெண்ணின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.
அதில், “உங்கள் காதலர் எவரேனும் அவர்களது காதிலிருந்து வரும் மெழுகையோ, சளியையோ, தூக்கத்தின் போது கண்ணில் இருந்து வரும் கண்ணீர் துளியின் கசடையோ உண்பார்களா? முன்கூட்டியே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுதான் எனக்கு தெரியும்.
என்னுடைய காதலனுக்கு இது சர்வ சாதாரண செயலாக இருக்கிறது. நான் அருவருக்கும் அளவுக்கு அவ்வளவு பெரிய விஷயமாக இது இருக்கவில்லை என்றும், பலரும் இதுப்போன்று செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அது உண்மைதானா?” எனக் கேட்டிருக்கிறார்.
இந்த பதிவைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்ததோடு, “என்ன இது கொடுமையான, அருவருப்பான செயலாக இருக்கிறது, அவர் என்ன ஒராங்குட்டானா?” போன்ற பல வகையான கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
தனது பதிவுக்கு பலரும் கருத்துத் தெரிவித்துள்ளதை அடுத்து, “நான் மட்டும்தான் இதனை கேவலமாக எண்ணியிருந்தேன் என நினைத்தேன். இந்த சூழலில் இருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியாமல் திக்குமுக்காடி போயிருக்கிறேன்” என மீண்டும் பதிவிட்டுள்ளார்.
தாய்ப்பாலை தவிர மனிதரின் உடலில் இருந்து வெளியேறும் எதுவுமே உண்ணக் கூடியதல்ல. ஆனால் அப்பெண்ணின் காதலனின் வழக்கம் அவரது கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்பே கட்டுப்படுத்த மருத்துவர்களை அணுகி சிகிச்சை மேற்கொள்வதே நல்லது என கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.