பிடித்த நபருடன் டேட்டிங் செய்வதென்பது அவர்களை பற்றி முழுதாக தெரிந்துக்கொள்வதற்கான முதல் படியாகவே இருக்கும். ஆனால் தன்னுடைய சமீபத்திய டேட்டிங்கின் போது தன்னுடைய பாய் ஃபிரண்ட் பால் வாங்கி குடித்தது முகத்தை சுழிக்க வைத்திருக்கிறது பெண் ஒருவர் மம்ஸ்நெட் இணையதளத்தில் பதிவிட்டுள்ள வைரலாகியுள்ளது.
இது தொடர்பான அந்த பெண்ணின் மம்ஸ்நெட் பதிவில், சமூக வலைதளம் மூலம் பழகத் தொடங்கி டின்னருக்காக சென்ற போது இப்படி நடந்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
அதன்படி, “ஆன்லைன் மூலம் பழகிய அவருடன் முதல் முறையாக டேட் சென்றிருந்தேன். ரெஸ்டாரென்ட்டில் பார்க்கும் போது அவர் மிகவும் கவர்ச்சிகரமாகவே இருந்தார். ஆனால் உணவு ஆர்டர் செய்யும் போது அவர் ஒரு கிளாஸ் பால் கேட்டது எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், விசித்திரமாகவும் இருந்தது.
இது மாதிரி ரெஸ்டாரென்ட்டிற்கு வந்து பால் ஆர்டர் செய்த எவரையும் இதுகாறும் நான் கண்டதே இல்லை. நிஜமாகவே இது மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது.
அவர் ஏன் இப்படி செய்தார் என ஆராய நினைத்தேன். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது கொஞ்சம் ஏமாற்றமடையவேச் செய்தது. இல்லை, நான் தான் நியாமற்றதாக இருக்கிறேனா என தெரியவில்லை. ஆனால் முதல் டேட்டிங்கிலேயே இப்படி நடந்தது ஒரு மாதிரி இருக்கிறது.” என அந்த பெண் குறிப்பிட்டுள்ளார். பெண்ணின் இந்த பதிவை கண்ட பலரும், அவர் உணர்ந்ததை போலவே ஆதரித்து பதிவிட்டிருக்கிறார்கள்.