டிரெண்டிங்

உத்தராகண்டில் ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வாக்குசதவீதம் என்ன? - முழு விவரம்

உத்தராகண்டில் ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் வாக்குசதவீதம் என்ன? - முழு விவரம்

Veeramani

உத்தராகண்டில் பாஜக வெற்றிபெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட  கட்சிகள் பெற்றுள்ள வாக்குசதவீதம் என்ன என்பது பற்றிய முழுமையான விவரம்...

மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட உத்தராகண்டில், ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை என்ற நிலையில், அனைத்து தொகுதிகளிலும் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட்டது. இதில், 47 இடங்களில் வெற்றி பெற்று, பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. காங்கிரஸ் 19 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.



உத்தராகண்டை பொறுத்தவரை பாரதிய ஜனதா மொத்தமாக 44.33 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 37.91 சதவீதமும், பகுஜன் சமாஜ் 4.82 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சி 3.31 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.  மேலும் இந்த தேர்தலில் நோட்டா 0.87 சதவீத வாக்குகளையும், சிபிஎம் 0.04 சதவீதமும், சிபிஐ 0.04 சதவீதமும், ஓவைஸி கட்சி 0.03, சமாஜ்வாதி கட்சி 0.29 சதவீதமும், ஆர் எல் டி 0.01 சதவீத வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி,பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிட்டன, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கூட்டணியாக தேர்தலை சந்தித்தது.