டிரெண்டிங்

”அந்த டிஸ்லைக் பட்டன குடுங்களேன் ப்ளீஸ்..” பார்லே ஜி அல்வாவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்

”அந்த டிஸ்லைக் பட்டன குடுங்களேன் ப்ளீஸ்..” பார்லே ஜி அல்வாவை பார்த்து கடுப்பான நெட்டிசன்ஸ்

JananiGovindhan

சோசியல் மீடியாக்களில் இன்ஃப்ளூயன்சராக இருப்போர் அடிக்கடி எதாவது வீடியோக்களை பதிவிட்டு வந்தாலும் திடீரென கன்டென்ட் எதுவும் சிக்காவிட்டால் எதையாவது அப்லோட் செய்வதையும் தவறமாட்டார்கள். இப்படியான பல வீடியோக்கள் ரீல்ஸ்களாக, ஷார்ட்ஸ்களாக தொடர்ந்து உலா வந்துக் கொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில், அதுப்போன்ற ஒரு சமையல் குறிப்பு வீடியோவைதான் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதன்படி 90s கிட்ஸ்கள் பெரும்பாலானோருக்கு பிடித்தமான பிஸ்கட்களில் ஒன்றான பார்லே-ஜி பிஸ்கட்டை வைத்து அல்வா செய்த வீடியோதான் வைரலாகி வருகிறது.

பிஸ்கட்டை வைத்து அல்வா செய்ததில் ட்ரோல் செய்ய என்ன இருக்கிறது என்ற கேள்வி எழலாம். ஆனால் இயல்பாகவே பார்லே ஜி பிஸ்கட் அதிக இனிப்பு சுவை கொண்டதுதான். அதில் சர்க்கரை, நெய் என அனைத்தையும் போட்டு இன்னும் கூடுதல் ஸ்வீட்டாகவே அந்த அல்வா இருக்கும் என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்கள்.

இப்போதும் பார்லே ஜி பிஸ்கட்டை பிடிக்காது என சொல்பவர்கள் அரிதாகத்தான் இருப்பார்கள். அப்படியான நாஸ்டால்ஜிக் நினைவலைகள் கொண்ட அந்த பார்லே ஜி பிஸ்கட்டில் அல்வா செய்வதாகச் சொல்லி ஃபர்னிச்சரை உடைத்திருக்கிறார்கள் என்ற பாணியில் குமுறியிருக்கிறார்கள்.

அதில், “OMG, என்னோட மோசத்திலும் மோசமான போஸ்ட்டா இது இருக்கும்” , “பார்லே ஜி பிஸ்கட் ஏற்கெனவே நல்ல ஸ்வீட்டாதான் இருக்கும். அதுல இன்னும் ஸ்வீட் சேர்க்குறதுலாம் நல்ல ஐடியாவே கிடையாது.” , “அல்வா பண்றதுனா கோதுமையோ, ரவையோ போட்டு செய்ய வேண்டிதான். எதுக்கு இப்படிலா? நேர்மையா சொல்லனும்னா இத பாக்கவே வெறுப்பா இருக்கு.” என பல ட்வீட்கள் இந்த பார்லே ஜி அல்வாக்கு எதிராக பதிவிடப்பட்டிருக்கிறது.