டிரெண்டிங்

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி விதவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் !

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி விதவிதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் !

webteam

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மக்களிடையே 100% வாக்குப்பதிவின் அவசியத்தினை மக்களிடையே கொண்டு சேர்க்க பலரும் பல விதங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் பேரணி மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை 

சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் என்பவர் பாலவாக்கம் கடற்கரையில் பாராசூட்டில் பறந்து சென்று அங்குள்ள மக்களிடம் 100% வாக்கு உள்ளடங்கிய பிரசுரங்களை வழங்கினார். அதுமட்டுமல்ல அதே இடத்தில் வாக்காளர் ஒருவர் தன் குழந்தையுடன் ராட்சத பலூனில் பறந்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

சென்னை கீழ்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள இளநீர் கடையில் 100 % வாக்குப்பதிவை அங்கு வரும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி 

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார வாக்காளர்களிடையே 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இரவு நேரங்களில் ஒளிரும் வகையிலான ராட்சத பலூனை பறக்கவிட்டார்.

தஞ்சாவூர் 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வாக்களிக்க வேண்டி, பேராவூரணியில் கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின் படி நேர்மையான தேர்தல் விழிப்புணர்வுக்காக வித்தியாசமான மொய் விருந்து நடத்தப்பட்டது.


பழனி

மக்களவை தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் புதுவிதமாக வாக்காளர்களை கவரும் வகையில் பழனியில் முருகன் கோயில் பஞ்சாமிர்த டப்பாக்களின் மீது 100% ஓட்டு என்ற வாசகம்  அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளது.

திருச்சி

வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மணற்சிற்பக்கலைஞர் சசிவர்மா என்பவர் திருச்சி காவிரி ஆற்றுப்படுகையில் 100 சதவிகித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ‘எனது வாக்கு எனது உரிமை’ என்ற வாசகத்துடன் மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 

திருவண்ணாமலை 

ஸ்கேட்டிங் சாகசங்கள் செய்து பள்ளி மாணவர்கள் ஒன்று சேர்ந்து மக்களவை தேர்தலில் 100% ஓட்டுப்பதிவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 

‘ஓட்டுரிமை’ என்பது நம் ஒவ்வொருவரின் கடமை. அதை விழிப்புணர்வின் மூலம் தான் மக்களிடையே கொண்டு சேர்க்கும் நிலைக்கு வந்துவிட்டது. மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் ஆட்சி அமைய நம் ஒவ்வொருவரும் வாக்கை நேர்மையான முறையில்செலுத்தி எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆட்சி அமைய அனைவரும் வாக்களிப்போம்.