உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 10 மாதங்களில் 921 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் மாதம் ஆட்சிக்கு வந்தது. யோகி ஆட்சியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நடத்தப்பட்ட என்கவுண்ட்டர்கள் குறித்த செய்தி வெளியாகியுள்ளது. 10 மாதங்களில் மட்டும் 921 என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.
என்கவுண்ட்டர்களில் மொத்தம் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 3 பேர் போலீஸ்காரர்கள். மேலும் 196 கிரிமினல்களும், 212 போலீசாரும் காயம் அடைந்துள்ளனர். காவல்துறை ஆவணங்களில் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், என்கவுண்ட்டர் சம்பவங்கள் குறித்து யோகி அரசுக்கு மனித உரிமை ஆணையம் கடந்த நவம்பர் 22-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய ஒன்றரை மாதங்களில் 8 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. புத்தாண்டு தினத்தில் மட்டும் மூன்று என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.