டிரெண்டிங்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும்: தினகரன் நம்பிக்கை

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும்: தினகரன் நம்பிக்கை

Rasus

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில், தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் என் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் அந்த நோட்டீஸை அடித்தவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது. வழக்கை பதிவு செய்தவர்கள் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை எளிதாக விட்டுவிடமாட்டோம். என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். நோட்டீஸில் எம்ஜிஆர், அண்ணா, தந்தை பெரியார் போன்றோரின் புகைப்படங்களும் உள்ளன. கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் முறையில் என்கிற முறையில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வழக்கிற்காக முன்ஜாமீன் எதுவும் பெறப்போவதில்லை. வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்பேன். தேச துரோக வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு நோட்டீஸில் எந்த விஷயமும் இல்லை. நீதிமன்றம் மூலம் இதில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன். நடராஜனுக்கு நல்ல முறையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கில், தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.