தமிழகத் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “ திமுக, அமமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது நகைச்சுவையானது. தேனியில் சர்ச்சைக்குரிய வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளளதால் தில்லு முல்லு நடக்க வாய்ப்புள்ளது. எனவே தில்லுமுல்லுவை தடுக்க கூடுதல் பாதுகாப்புடன் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், “ மே 23 ஆம் தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும். அப்போது ஆட்சியை கலைக்க திமுக எங்களுக்கு உதவ வேண்டும். ஆனால் திமுக ஆட்சி அமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம். அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக ஆதரவு தரவில்லையென்றால் அவர்கள் எங்களை பார்த்து பயந்து விட்டார்கள் என்று அர்த்தம்” எனத் தெரிவித்திருந்தார்.