தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, முதல் நாள் பரப்புரையை ஏற்காடு தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். வாழப்பாடியில் வேட்பாளர் சித்ராவை ஆதரித்தும், கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட தம்பம்பட்டியில் வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்தும் முதல்வர் வாக்கு சேகரித்தார்.
ஆத்தூரில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரனுக்கு ஆதரவு திரட்டிய எடப்பாடி பழனிசாமி, திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டம், மழைநீர் சேமிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் நீர்மேலாண்மை சிறப்பாக கையாளப்பட்டது. விவசாயிகள், நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பிரத்யேக திட்டங்கள் மூலம் நல்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். அதிமுக அரசின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.