டிரெண்டிங்

ஒரே நேரத்தில் தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

ஒரே நேரத்தில் தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

webteam

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சில சட்டமன்றங்களின் ஆயுளை குறைத்து முன்கூட்டிய தேர்தல் நடத்தும் சூழல் வரும் என்பதால் அதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்றும் கூறப்படுகிறது. இதைப்போல் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முடிவுக்கு எதிராக உள்ளனர்.

இந்நிலையில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் பிரதமரின் யோசனைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் சட்டமன்றங்களுக்கு மக்களவையுடன் தேர்தல் நடத்துவதன் மூலம் செலவும் குறையும் என்று அவர் அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.