டிரெண்டிங்

ஆட்சியாளர்கள் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ஆட்சியாளர்கள் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டும்: டிடிவி தினகரன்

webteam

ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர். அவர்களின் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக ‌அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், ’தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளர் சசிகலாதான் என அபிடவிட் தாக்கல் செய்தவர்கள்தான் தற்போது அவரது பதவி செல்லாது, துணைபொதுச்செயலாளர் பதவி செல்லாது என தீர்மானம் போட்டு அவசர அவசரமாக 27 பேர் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அது சட்டப்பட்டி குற்றம். நான் 23 ஆண்டுகளாக அம்மாவின் பின்னாலிருந்து அரசியல் கற்றவன். சோதனைகளை கடந்து வந்தவன். என்னிடமிருந்து நிதானமாகத்தான் வார்த்தைகள் வரும். ஆட்சியில் இருப்பவர்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கின்றனர்.  அவர்களின் தலைக்கனத்தை இறக்கி வைக்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இதே மதுரையில் ஆட்சியில் இருப்பவர்களின் சார்பில் அரசு விழாவாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டதே.. அப்போது இந்த எழுச்சியை காணமுடிந்ததா? பயனாளிகள் என்ற பெயரிலே பள்ளி மாணவமாணவிகளை அழைத்து வந்திருந்தார்கள். இது கூட்டி வந்த கூட்டமா? தானாக வந்த கூட்டமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களா? கட்சியின் தொண்டர்கள்’ என்றார்.