டிரெண்டிங்

அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு விவசாயம் தெரியாதா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு விவசாயம் தெரியாதா? முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி

webteam

வேளாண் சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக எம்.பி. எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனுக்கு விவசாயத்தைப் பற்றி தெரியாதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டத்தில் ஊழல், கால்வாய்கள் தூர்வாரும் பணிகளில் ஊழல், கிசான் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளதால், தான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. தனக்கு விவசாயம் குறித்து எதுவுமே தெரியாது என முதல்வர் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துச் சொல்ல வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகளின் நலனில் அக்கறையும் இருந்தால் போதும்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து மாநிலங்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியனுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாததா? எல்லாம் தனக்குத் தெரியும், தன்னை எதிர்ப்போர்க்கு எதுவும் தெரியாது என்றும் நினைப்பதும் பேசுவதும், ஆணவத்தின் அடையாளம், அழிவின் ஆரம்பம் என்ற ஆன்றோர் அறிவுரையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணிப்பார்க்க வேண்டும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.