நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஊரடங்கால் தவிக்கும் மனநலம் பாதித்தவரின் குடும்பத்திற்கு 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சி மூலம் தன்னார்வலர்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
வாய்மேடு பகுதியில் வசித்து வந்த கோபு என்பவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சியில் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்களை கோபுவின் தந்தை, சகோதரர் வேலைக்கு சென்று காப்பாற்றி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக உணவுக்கே வழியின்றி சிரமத்திற்கு ஆளாகினர்.
இது தொடர்பாக 'புதிய தலைமுறை'யின் 'துளிர்க்கும் நம்பிக்கை' நிகழ்ச்சியில் செய்தி வெளியானதையடுத்து, அவர்கள் குடும்பத்திற்கு வேதாரண்யம் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் 15 நாட்களுக்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு நூற்றுக்கணக்கான அழைப்புகள் உதவி கோரி வந்துகொண்டிருக்கின்றன. எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.