டிரெண்டிங்

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி

துளிர்க்கும் நம்பிக்கை: மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் உதவி

நிவேதா ஜெகராஜா

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 10 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட 33 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு 'புதிய தலைமுறை' துளிர்க்கும் நம்பிக்கை மூலம் நம்பிக்கை தரும் விதமாக அரிசி, மளிகை பொருட்களை வழங்கி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 33 பேருக்கு அத்தியாவசிய பொருட்களை புதிய தலைமுறை வழங்கியது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டுச்சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு, ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கைக்கு அழைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான கௌதம், தம்மை போன்று 10 பேர், ரயில், பேருந்துகள் என வியாபாரம் செய்து பிழைப்பை நடத்தி வந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்ததாகவும், புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை மூலம் நிவாரணம் கிடைத்தது மகிழ்ச்சி என்கிறார்.

தமக்கு மட்டுமின்றி தம்மை போன்றோருக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய புதிய தலைமுறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறுகிறார் மற்றொரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியான டில்லி பாபு.

இதே போல, மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, காட்டாவூர், மெய்யூர், ஒதிக்காடு, சின்ன ஈக்காடு, பெரும்பாக்கம், திருவள்ளூர், புங்கத்தூர், மணவாள நகர், ஆவடி, திருமுல்லைவாயல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த 23 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, டீத்தூள், சோப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளில் சிலவற்றுக்கு செய்யப்பட்ட உதவிகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'