டிரெண்டிங்

ம.பி.யில் ராகுலை தாக்கிப் பேசிய ஸ்மிருதி இரானி ! மக்கள் கொடுத்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ

ம.பி.யில் ராகுலை தாக்கிப் பேசிய ஸ்மிருதி இரானி ! மக்கள் கொடுத்த அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ

webteam

தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்மிருதி இரானி காங்கிரஸ் கட்சி மீது கூறிய குற்றச்சாட்டிற்கு மக்கள் தகுந்த பதலளித்துள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பொதுகூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ஒரு பொதுக் கூட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தபோது அப்பகுதி மக்கள் அவருக்கு தகுந்த பதிலளித்து அவரை அதிர்ச்சியடைய வைத்தனர். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி, 'ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தபடி விவசாயிகள் கடன்களை மாநில காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்து விட்டதா' என்று கேட்டுள்ளார். இதற்கு ஆமாம் ஆமாம் என அங்கிருந்த மக்கள் கூறி அமைச்சரை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, பாஜகவினரின் பொய்களை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்று கூறியுள்ளது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் இறக்கப்பட்டுள்ளார். ராகுல் விமர்சிக்க முயன்ற நிலையில், இரானிக்கு அவமானம் நேர்ந்திருக்கிறது. 2014 மக்களவை தேர்தலிலும் ராகுலை எதிர்த்து ஸ்மிருதி களத்தில் நின்றார். ஆனால் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலின்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான் காங்கிரஸ் அளித்தது முக்கியமான வாக்குறுதியாகும்.