ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. களத்தில் முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டைம்லைன்...
8.00 AM : பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடங்கியது.
8.07 AM: பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வாக்களித்தார்.
8.08 AM: சென்னை புதுவண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடியில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு
8.11 AM: 6,000 அல்ல.. 60,000 கொடுத்தாலும் ஆர்.கே.நகர் மக்கள் ஏமாற தயாராக இல்லை என வாக்களித்த பின் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் பேட்டி
8.12 AM: ஆர்.கே.நகரில் 3,000-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வுக்கு பின் காவல் ஆணையர் விஸ்வநாதன் பேட்டி. ஆர்.கே.நகர் தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும் விஸ்வநாதன் உறுதி
* ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீண்ட வரிசையில் நின்று மக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
* ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 10 முதல் 15 துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்.
8.55 AM : “ ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு நிலவரம் தெரிவிக்கப்படும். வாக்குப்பதிவை தலைமைச் செயலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கிறோம். வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதை சிறப்பு அதிகாரி பத்ராவும் பார்த்து வருகிறார்” என தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி பேட்டி
9.00 AM: புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள 77-ஆவது வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுது. 30 நிமிடங்களுக்கு மேலாக பழுது உள்ளதால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
9.13 AM: ஆர்.கே.நகரில் காலை 9 மணி நிலவரப்படி 7.32% வாக்குகள் பதிவு
9.22 AM: ஆர்.கே.நகரில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகி வருவதாக தகவல் வருகின்றன; திமுக சட்டத்துறை செயலாளர் மூலம் தேர்தல் ஆணையத்திடம் புகார் தரப்படும்- மருதுகணேஷ்
9.37 AM: சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள 77-வது வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றம்
9.38 AM: ஆர்.கே.நகரில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என வண்ணாரப்பேட்டை வாக்குச்சாவடியில் வாக்களித்த பின் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் பேட்டி
9.39 AM: இதுவரை ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு சரியாக நடந்து வருகிறது. மக்கள் என்னை நம்புவதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; ஜனநாயகத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைப்போம் என டிடிவி தினகரன் பேட்டி
9.40 AM: ஆர்.கே.தொகுதியில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது
9.50 AM: ஆர்.கே.நகரில் காலையில் பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நேற்றிரவு சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன: தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பேட்டி
10.15 AM: காலை 10 மணி வரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 10.99 சதவீத வாக்குகள் பதிவு
11.15 AM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 11 மணி வரை 23.74 சதவீத வாக்குகள் பதிவு
12.30 PM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 12 மணி வரை 26.30 சதவீத வாக்குகள் பதிவு.
01.20 PM: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நண்பகல் 1 மணி வரை 41.60 சதவீத வாக்குகள் பதிவு
2.00 PM: ஆர்.கே.நகரில் மொத்தமுள்ள 2.28 லட்சம் வாக்காளர்களில் இதுவரை 99,213 பேர் வாக்களித்துள்ளனர்.