ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதியதலைமுறையிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார். மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காவே ரசிகர்களிடம் ரஜினி தெரிவித்துள்ளார். அது தொடர்பான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவித்தபிறகு கட்சி பற்றி அறிவிப்பதாக தான் ரஜினி கூறியிருக்கிறார். இதனை பார்க்கும் போது இன்னும் முழுமையான அரசியலுக்குள் ரஜினி வரவில்லை என்று தெரியவருகிறது.
மேலும் பேசுகையில் கட்சி, கொள்கை குறித்து எதுவும் அவர் கூறவில்லை. அதனை அறிவித்தபிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தங்களதுநிலைப்பாட்டை தெரிவிக்கும். தற்போது ஆட்சி குறித்து ரஜினி கருத்து தெரிவித்து இருப்பது வரவேற்கதக்கது.மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் நடந்து வருவது குறித்து பல்வேறு கட்சியினர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதனை பலம் சேர்க்கும் வகையில் ரஜினிகாந்த் கருத்து ஆட்சி பற்றியதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.