பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலமான பஞ்சாப்பில், பலத்த பாதுகாப்புகளுக்கிடையே உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மாலை வெளியான முடிவில், அம்ரிஸ்டர், ஜலந்தர், பட்டியாலா ஆகிய மாநகராட்சி பகுதிகளில் உள்ள 189 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி 14 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளைப் பொறுத்தவரை 267 வார்டுகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது. அதில் சுயேட்சை வேட்பாளர்கள் 94 பேரும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்கள் 15 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது 8 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றியதாகவும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.