தனக்கு விருப்பமான யூடியூப் நட்சத்திரத்தைச் சந்திக்கும் முயற்சியில் மூன்று நாட்களாக 250 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்துள்ளனர் பஞ்சாப்பை சேர்ந்த சிறுவன்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன், தனக்கு விருப்பமான யூடியூப் நட்சத்திரத்தைச் சந்திக்கச் சைக்கிளில் டெல்லிக்கு சென்றுள்ளார். சிறுவனைக் காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதன் பின் சிறுவன் சைக்கிளில் பயணம் செய்து வருவதை கண்டுபிடித்து, அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.
‘Triggered Insaan' யூடியூப் சேனலை வைத்திருக்கும் நிச்சய் மல்ஹான் என்ற யூடியூப்பர் 1.7 கோடி சப்ஸ்கிரைபரை கொண்டுள்ளார். இவரின் மிக பெரிய ரசிகரான பஞ்சாப் சிறுவன் டெல்லிக்கு சென்று அவரை காண மூன்று நாளாக பஞ்சாப் மாநிலம் பாட்னாவிலிருந்து டெல்லிக்கு சைக்கிளில் சென்றுள்ளார். சிசிவிடி காட்சிகள் மூலம் இதை உறுதிப்படுத்திய காவல்துறை, சமூக வலைதளம் மூலம் சிறுவன் குறித்த செய்தியை டெல்லி காவல்துறைக்கு தெரியப்படுத்தினர். இதன் மூலம் இந்த செய்தி நிச்சய் மல்ஹான் உட்பட அனைவருக்கு விசயம் தெரியவந்து சிறுவன் டிரெண்ட் ஆனான்.
டெல்லிக்கு செல்லும் வழியில் எங்கு தங்குகிறான் எங்கு ஓய்வு எடுக்கிறான் என எந்த தகவலுக்கும் கிடைக்கபெறாமல் இருந்ததது. இதன் பின்பு, நிச்சய் மல்ஹான் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட்டுக்கு காவல்துறை தொடர்பு கொண்டு பேசிய போது, அந்த யூடியூப்பர் துபாய் சென்ற தகவல் கிடைத்துள்ளது. இதன்பின்பு டெல்லி சிசிவிடி காட்சிகளில் சிறுவனை கண்டுபிடித்த காவல்துறையினர், முதலில் அச்சிறுவனின் சைக்கிளை தான் கண்டு பிடித்துள்ளனர். பின்னர் சுற்றுவட்டாரத்தில் தேடிய போது, அருகிலிருந்த பூங்காவில் இருப்பதை அறிந்துகொண்டு, அச்சிறுவனை பிடித்தனர்.
ஆனால், அந்த சிறுவனின் உழைப்பு ஆசையும் கைகூடவில்லை. அந்த யூடியூபர் இப்போது டெல்லியில் இல்லை, துபாய் சென்றுள்ளார் என்ற செய்தி காவல்துறையினர் மூலம் அச்சிறுவனுக்கு தெரிய வந்துள்ளது.
இதன் பின், இந்த செய்தி காவல்துறை மூலம் யூடியூப்பர நிச்சய் மல்ஹானுக்கு தெரிய வந்துள்ளது. இதன்பின்பு, சாலைகள் மற்றும் டெல்லி அடுக்குமாடிக்குடியிருப்புகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுவனைப் பிடித்தனர். இதன்பின்பு, அந்த சிறுவனை டெல்லிக்கு வந்து அழைத்து சென்றனர் அவனின் பெற்றோர்.