டிரெண்டிங்

பஞ்சாப்க்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் - 117 தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் போட்டி

பஞ்சாப்க்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் - 117 தொகுதிகளில் 1,304 வேட்பாளர்கள் போட்டி

Veeramani

பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் சட்டமன்றத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆட்சியை காங்கிரஸ் தக்கவைக்குமா? பாஜக தலைமையிலான கூட்டணி, ஆட்சியை பிடிக்குமா? என்பதை பஞ்சாப் மக்கள் முடிவு செய்ய உள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தின் 23 மாவட்டங்களில் உள்ள 117 சட்டமன்றத்தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 237 பேர் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகளை சேர்ந்தவர்கள். சுமார் 250 பேர் அகாலி தளம் போன்ற மாநில கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களாக உள்ளனர்.

இவர்களில் 93 பேர் பெண் வேட்பாளர்கள். முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் பக்வந்த் மான், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து, முன்னாள் முதலமைச்சர்கள் அமரிந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், சிரோமணி அகாலி தளத்தலைவர் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்டோர் தேர்தல் களத்தில் நட்சத்திர வேட்பாளர்களாக கவனம் ஈர்க்கிறார்கள்.

தேர்தலுக்காக 24,689 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2013 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக 3 சிறப்பு மாநில கண்காணிப்பாளர்களும், தேர்தல் ஆணையத்தின் சார்பாக 65 போது தேர்தல் பார்வையாளர்களும், 29 காவல்துறையை சேர்ந்த தேர்தல் பார்வையாளர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர். சுமார் 10,000 ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளன.

கொரோனா காரணமாக வழக்கத்தை விட சுமார் 2 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச் சாவடி மையத்தில் 1400 பேர் வரை வாக்களிக்க இருந்த நிலையில், இந்த முறை அந்த எண்ணிக்கை 1,200 பேர் வரை மட்டுமே வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது