கன்னியாகுமரி மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்ற முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில், “மதவழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு விடும். தொழில்கள் எல்லாம் முடக்கப்பட்டுவிடும் என்றொல்லாம் ஜாதி, மதங்களை முன்வைத்து கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது எதிர்க்கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்னர். இதனால்தான் அப்போது எனக்கு இந்தத் தொகுதியில் தோல்வி கிடைத்தது.
தற்போது எதிர்க்கட்சிகள் கூறிய பொய் புகார்கள் எதுவும் நடக்கவில்லை என்பது தெரிந்துவிட்டது. மக்கள் உணர்ந்துகொண்டார்கள். அதனால் இந்த முறை கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவேன்” என்றார். மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தை குட்டி சிங்கப்பூராக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன், மக்கள் விரும்பக்கூடிய திட்டங்களை தவிர வேறு எந்த திட்டங்களையும் கொண்டுவரக் கூடிய எண்ணம் இல்லை எனவும் தெரிவித்தார். பொன்.ராதாகிருஷ்ணனின் முழு நேர்காணலை கீழுள்ள வீடியோவில் காணலாம்.