டிரெண்டிங்

‘வாக்களிக்க பேரணியாக சென்ற மோடி’ விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

‘வாக்களிக்க பேரணியாக சென்ற மோடி’ விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்

webteam

பிரதமர் மோடி அகமதாபாத்தில் வாக்களிக்கு முன் சாலையில் பேரணியாக சென்றது குறித்து குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. அதில், குஜராத் மாநிலத்துள்ள 26 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களிப்பதற்கு முன்பு அவர் திறக்கப்பட்ட ஜீப்பில் வந்தார். அப்போது மோடி சாலையில் இறங்கி நடந்து மக்களிடம் ஒரு சிறிய உரையும் ஆற்றினார். 

அதில் அவர், “பயங்கரவாத்தின் முக்கிய ஆயுதம் ‘ஐஇடி’. அதேபோல ஜனநாயகத்தின் முக்கிய ஆயுதம் ‘வாக்கு’. உங்களின் வாக்காளர் அடையாள அட்டை ஐஇடியைவிட சக்தி வாய்ந்தது. இதனால் நீங்கள் அனைவரும் உங்களின் வாக்காளர் அட்டையின் சக்தி தெரிந்துகொள்ளவேண்டும்” எனக் கூறினார்.

இதனையடுத்து பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அத்துடன் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் பிரதமர் மோடி வாக்களிக்கும் முன் மக்களிடம் உரையாடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார். இதனால் அவரை 48 முதல் 72 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடைசெய்யவேண்டும் என  தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து குஜராத் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமளிக்க தேர்தல் ஆணைய உத்தரவிட்டுள்ளது.