டிரெண்டிங்

10.5% இட ஒதுக்கீடு நிரந்தரமானதா? தற்காலிகமானதா? - ப.சிதம்பரம் கேள்வி

10.5% இட ஒதுக்கீடு நிரந்தரமானதா? தற்காலிகமானதா? - ப.சிதம்பரம் கேள்வி

webteam

வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தற்காலிகமானதா? அல்லது நிரந்தரமானதா? என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

10.5 சதவிகித உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவதாகவும், அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இட ஒதுக்கீடு நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் தெரிவிப்பதாகவும், அவருக்கு அவருடைய கவலை என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன சொல்லப் போகிறார் என்றும், இட ஒதுக்கீடு என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.