டிரெண்டிங்

தேர்தல் விறுவிறு: தமிழகத்தில் 6.28 கோடி வாக்காளர்கள்!

தேர்தல் விறுவிறு: தமிழகத்தில் 6.28 கோடி வாக்காளர்கள்!

jagadeesh

தமிழகத்தில் 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக இருந்தது. பின்னார் தகுதியுடைய வாக்காளர்களை சேர்க்கும் பணி நடைபெற்றது. ஜனவரி 20 முதல் மார்ச் 19 வரை புதிய வாக்காளர்கள் பட்டியலில் இணைந்த பின், 6 கோடியே 28 லட்சத்து 69 ஆயிரத்து 955 என வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.

அதன்படி, 3 கோடியே 9 லட்சத்து 23 ஆயிரத்து 651 பேர் ஆண் வாக்காளர்கள். 3 கோடியே 19 லட்சத்து 39 ஆயிரத்து 112 பேர் பெண் வாக்காளர்கள். மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஏழாயிரத்து 192 பேர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 10 லட்சம் பேர் அதிகமாக உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 6 லட்சத்து 98 ஆயிரத்து 820 வாக்காளர்கள் உள்ளனர்.

குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 770 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டவாரியாக அதிகபட்சமாக சென்னையில் 40 லட்சத்து 57 ஆயிரத்து 61 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 30 ஆயிரத்து 983 வாக்காளர்கள் உள்ளனர்.