டோக்கியோ ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் மிக முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா வரும் ஜூலை 23 ஆம் தேதி ஜப்பானின் தேசிய விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் ஒலிம்பிக் திருவிழா இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே டோக்கியோவில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்ததாலும், அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாலும் உலகின் மிக முக்கிய பிரபலங்கள் ஆயிரம் பேர் மட்டுமே தொடக்கவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பான் பேரரசர் நரிஹிட்டோ, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.