டிரெண்டிங்

வரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர்

வரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர்

webteam

நாளுக்கு நாள் பெட்ரோல் , டீசல் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தினந்தோறும் இவற்றின் விலையை நிர்ணையிக்க ஆரம்பித்ததில் இருந்து பைசா, பைசாவாக கூட்டி ரூ 80 ஐ தாண்டி நிற்கிறது பெட்ரோல் விலை. இந்நிலையில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை குறைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது

குறிப்பாக பெட்ரோல் , டீசலை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் ஒன்று கூட அதற்கு இசைவி தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக மத்திய அரசு சார்பில் கச்சா எண்ணெய் மீது விதிக்கப்படும் கலால் வரியை குறைத்து விடுங்கள் பதிலுக்கு கோரிக்கை வைக்கின்றனர். 

செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  எண்ணெய் விலையை தினமும் நிர்ணயம் செய்யும் முறையை மாற்ற முடியாது என்றும் மாநிலங்கள் கச்சா எண்ணெய் மீது விதிக்கும் வரியை ஏற்க கூடிய அளவிலும் , பொறுப்பான முறையிலும் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.