டிரெண்டிங்

பதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..!

பதாகைகள், சுவரொட்டிகளுக்கு புதிய விதி.. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு புதிய கட்டுப்பாடு..!

webteam

ரஜினி மக்கள் மன்றத்தின் பதாகை மற்றும் சுவரொட்டி வடிவமைப்புக்காக புதிய கட்டுபாடுகளை மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் விதித்துள்ளார்.

ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினிகாந்த், அதை பலப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார். இதன் முதல் கட்டமாக ரஜினி மக்கள் மன்றத்திற்கான நிர்வாகிகளை நியமித்தார். அதன் பின் கிளை மன்றங்களை உருவாக்கும் வேலைகளை மாவட்ட நிர்வாகிகளுக்கு வழங்கியிருந்தார். அதற்கான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளன. மேலும் கிளை மன்ற வேலைகளை சரியாக செய்யாத நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கி வருகிறார்.

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாக விதியை உருவாக்கி அதை புத்தகமாக வெளியிட்டார். அதில் மக்கள் மன்ற நிர்வாகிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன..? என்பதை கூறியிருந்தார். அதன் பின் மாவட்ட மகளிர் அணி செயலாளர்களையும், இளைஞர் அணி செயலாளர்களையும் கடந்த 20-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகிகளுக்கு புதிய கட்டுபாடு ஒன்றை வித்துள்ளார். அதாவது மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்காக உருவாக்கப்படும் பதாகைகள் எந்த அளவில் இருக்க வேண்டும், அதில் யார் யார் புகைப்படங்கள் இடம் பெற வேண்டும், எந்த வடிமைப்பில் இருக்க வேண்டும் என்பதை கூறியுள்ளார். அதில்

1. மாவட்ட / மாநகரம் சார்ந்த நிகழ்வில் மாவட்ட/ மாநகர நிர்வாகிகள் புகைப்படம் இடம் பெறலாம்.

2. மாநகரத்திற்கு உட்பட்ட மண்டலம் சார்ந்த நிகழ்வில் மாநகர செயலாளர் புகைப்படத்தைவிட சிறிய அளவில் மண்டல நிர்வாகிகள் புகைப்படம் இடம்பெறலாம்.

3. மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய / நகரம் சார்ந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் புகைப்படத்தை விட சிறிய அளவில் ஒன்றிய நிர்வாகிகள்/ நகர நிர்வாகிகள் புகைப்படம் இடம்பெறலாம் என்று கூறியுள்ளார்.

இதற்காக எட்டு வகையிலான வடிவங்களை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். மன்றத்திற்காக உருவாக்கப்படும் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளை தலைமை மன்றத்திற்கு அனுப்பி அவர்களின் அனுமதி எண் பெற்று அதை கொண்டு அச்சிட வேண்டும் என்றும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.