டிரெண்டிங்

’’விளம்பரத்திற்காகவே போராட்டம்; துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்’’ - மாணிக்கம் தாகூர் காட்டம்

’’விளம்பரத்திற்காகவே போராட்டம்; துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்’’ - மாணிக்கம் தாகூர் காட்டம்

Sinekadhara

’’எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்’’  என்று காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ட்வீட் செய்துள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில், அதற்குள் கட்சிக்குள் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு தரப்பினர் தனித்தனியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேறு கட்சியில் இருந்து காங்கிரசுக்கு திரும்பியவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி அக்கட்சி எம்பி விஷ்ணு பிரசாத் ஏற்கனவே போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கிடையே, காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை என ஜோதிமணி எம்.பி வருத்தம் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். 

அவரைத் தொடர்ந்து எம்.பி மாணிக்கம் தாகூரும் ’’எதிரிகளை கண்டுக்கொள்ளுங்கள்’’ என்று ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘’அன்னை சோனியாகாந்தி அவர்கள் தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழுவில் எடுக்கும் முடிவு, ஒவ்வொரு உண்மையான காங்கிரஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாக கிடைக்கும். ஆனால் சிலர் விளம்பரத்திற்காக காங்கிரஸ் இயக்கதிற்கு மிகப்பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள்.

கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டதலைவருக்கு அதுவும் சில நூறு ஒட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் வந்த தொகுதியை வாங்ககூடாது என சண்டை போட்டு வரவிடமால் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா?

தன் தந்தையால் MLA இப்ப MP வாங்கியவர்கள் இப்ப மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பாஜக+ அதிமுகவுக்கு உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை ஆன இன்று நாடாகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்.

’’ என்று கூறியுள்ளார்.